Friday, March 23, 2007

பால்வீதி - அப்துல் ரகுமான்

தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா

வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட

அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும

*******************

சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம

திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்ட

மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவ

4 comments:

சென்ஷி said...

கவிக்கோவின் கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வோரு அர்த்தம் எனக்கு தந்திருக்கின்றன.

நல்ல தேர்வு... வாழ்த்துக்கள் இசாக்

சென்ஷி

sivakumar said...

கவிதை எழுதுவது எப்படி?
கவிதை உலகில் யாரை தொட்டால்
கவிதை என்னை தொடும்?
உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தைகளை நான் கவிக்கோவிடம் பெற்றேன். நன்றி தங்கள் இடுகைக்கு
மேலும் கவிக்கோவை தேடி வருகின்றேன் மீண்டும் உயிர்த்த தினங்களில்

அகநாழிகை said...

மிக அழகான கவிதை!

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..